தோல்வியில் பாடம்: வேகமெடுக்கின்றது கூட்டமைப்பு!
நாடாளுமன்ற தேர்தல் படுதோல்வியின் பின்னராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தன்னை மீள ஒழுங்கமைக்க தொடங்கியுள்ளது.குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளக குழப்பங்கள் இதற்கு சாதகமான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக மாவை.சேனாதிராசாவின் மகன் கலையமுதன் இவ்விடயத்தில் கூடிய அக்கறை செலுத்த தொடங்கியுள்ளார்.
கூட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்திய சுமந்திரன் தரப்பு பலவீனமடைய தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் மாவை அணி வலுவடைய தொடங்கியுள்ளது.
இதனிடையே தமிழரின் அஞ்சலி உரிமையையும் பறிக்கும் கோட்டாபய அரசின் இராணுவ ஆட்சி அணுகுமுறையை எதிர்கொள்வது எப்படி என்பதை ஆராய தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் நேற்று (15) ஒன்றுகூடினர்.
யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அனைத்துத் தரப்பும் ஓரணியாகத் திரள்வது குறித்து ஆராயப்பட்டது.
அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக வடக்கு, கிழக்கு தழுவியரீ தியில் மாபெரும் ஜனநாயக வழிப் போராட்டம் நடத்துவது எனவும் எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தப் போராட்டம் என்ன? எப்படி அமைய வேண்டும்? என்பதை அனைத்துத் தமிழ் தரப்புக்களுடனும் ஆராய்ந்து முடிவெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனைத்துக் கட்சிகள், பல்கலைகழகசமூகம், வர்த்தர்கள், மதகுருமார், பொது அமைப்புக்களை உள்ளடக்கியதாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கலந்துரையாடல் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திலீபன் நினைவு நாளுக்குள்ளேயே போராட்டம் நடக்கலாம் என அறியமுடிகின்றது.
இதனடிப்படையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்திலேயே தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை ஒன்றிணைத்து இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக எப்படிச் செயற்படுவது? என்ற தீர்மானத்தை ஒருமனதாக எடுப்பதுடன்,எடுக்கப்படும் தீhமான்தை எப்படி நடைமுறைப்படுத்தப் போகின்றோம் என்பதையும் தீர்மானிக்கவுள்ளோம் என மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.