März 28, 2025

தமிழகத்தில் கொரோனவினால் இதுவரையில் 8,502 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரங்களைத் தமிழக சுகாதாரத் துறை இன்று (செப்டம்பர் 15) மாலை வெளியிட்டது. இன்று 78,711 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 5,697 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 5,14,208 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,502 ஆக அதிகரித்துள்ளது. இன்று 5,735 பேர் கொரோனாவில் இருந்து மீண்டதால் மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,58,900 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 46,806 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையைப் பொறுத்தவரையில் இன்று 989 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,50,572 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தொடர்ந்து அதிகபட்சமாக இன்று கோவையில் 485 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.