November 22, 2024

தொடர்ச்சியாக 10 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்.

நேற்று (13/09/2020) மனிதநேய ஈருருளிப்பயணம் Germany நாட்டின் எல்லையில் இருந்து ஆரம்பமாகி Saarbrücken மாநகரத்தினை வந்தடைந்து மக்கள் சந்திப்பும் நடைபெற்றது. இன்று (14/09/2020) Saarbrücken மாநகரசபையில் காலை 9 மணி அளவில் முதல்வரினை சந்திந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி மனுவும் கையளிக்கப்பட இருக்கின்றது, அதனைத்தொடர்ந்து France நாட்டினுள் காலை 10 மணிக்கு உள்நுளைந்து பல அரசியற் சந்திப்புக்களையும் மேற்கொள்ள இருக்கின்றார்கள் மனிதநேய ஈருருளிப்பயணப் போராளிகள்.
எவ்விடர் வரினும் , இலக்கினை நோக்கி நிச்சயம் எம் பயணம் தொடரும்.