März 28, 2025

வவுனியா விபத்து! மாணவன் பலி!

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.பூம்புகார் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் நோக்கிசென்ற  உந்துருளியும் நொச்சிக்குளம் நோக்கிப் பயணித்த ஈருளியும் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஈருளியில் பயணித்த நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த இ.புவிதன் (வயது14) என்ற மாணவனே படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிப்பபட்டு சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மற்றையநபர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.