Mai 12, 2025

மருத்துவ துறை:பணிக்கு கௌரவம்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையொன்றில் முதன் முறையாக முக்குழந்தைகளின் பிரசவம் மகப்பேற்று மருத்துவ நிபுணர் ந.சரவணபவாவினால் அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. தனது மருத்துவ சேவையினை, தனியார் வைத்தியசாலைகளில் பணம் பெற்று செய்யாது முற்றிலும் இலவசமாக அரச வைத்தியசாலைகளில் மாத்திரமே வழங்கிவரும் மருத்துவ நிபுணர் சரவணபவாவினை அகில இலங்கை சைவ மகா சபை அன்பே சிவம் விருது வழங்கி கவுரவித்திருந்தது.