திலீபன்: அணிசேரும் கட்சிகளது இளையோர்!
திலீபனின் ஜந்து அம்சக்கோரிக்கைகளை கைகளில் எடுக்க தமிழ் இளையோர் தயாராகியுள்ளனர்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அதனை அவர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பவற்றிலுள்ள இளைஞோர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து திலீபனின் ஜந்து அம்சக்கோரிக்கைகளை கைகளில் எடுக்க தமிழ் இளையோர் தயாராகியுள்ளனர்.
திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு திலிபனின் ஜந்து அம்சக்கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழ் இளையோர் முள்ளிவாய்க்காலில் இருந்து நல்லார் வரையான நடைபயணத்திற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே தேசியம் சார்ந்து செயற்படும் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைய அழைப்பு விடுத்துள்ள அவர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் முழு ஆதரவை வழங்க முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனிடையே வவுனியாவிலிருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வவுனியாவிலிருந்து பேரணிக்கு இன்னொரு அழைப்பை விடுத்துள்ளதேயென எழுப்பப்பட்ட கேள்விக்கு அனைவரும் இணைந்து பேரணியினை முள்ளிவாய்க்காலில் இருந்து முன்னெடுப்பது பற்றி அவர்களிடம் பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
வெளியிலுள்ளவர்கள் கேலி செய்யாத வகையிலபேரணியை முன்னெடுக்க அனைத்து தமிழ் தேசியத்தை நேசிப்பவர்களும் ஆதரவளிப்பரென நம்புவதாகவும் தெரிவித்தனர்.
இப்பத்திரிகையாளர் சந்திப்பில் கட்சிகளது இளைஞர் அணி தலைவர்கள் பலரும் பங்கெடுத்திருந்தனர்.