மாலை போட்டு: கொண்டாடு: தமிழரசு?
ஈழத்தில் சூடுசுரணையற்றவர்கள் அதிகம் எங்கிருக்கின்றார்கள் என கேள்வி எழுப்பினால் கூட்டமைப்பில் அதிலும் தமிழரசில் என சின்ன பிள்ளைகளும்
கூறிவிடும்.தேர்தல்களில் அடிமேல் அடி வாங்கினாலும் சூடு சுரணையற்று திரிவது தமிழரசு பாணி.
அதிலும் உள்ளுராட்சி சபைகள் தாண்டி அடுத்த மாகாணசபை கனவுகளுள் இருக்கின்றவர் பலரும் தமிழரசினுள் இருந்து இப்போதும் தொங்கிக்கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் ஆளாளுக்கு ஒன்றை பிடித்துக்கொண்டு தொங்க சிலரோ ஊடகத்துறையென சுமந்திரன்,மாவையென அல்லக்கை அரசியல் செய்கின்றனர்.
ஊடக தலையை காட்டி உள்ளுராட்சிகளுள் கால் வைத்த அவர்களது அடுத்த கனவு மாகாணசபையர்க இருந்துவருகின்றது.
அதிலும் தமிழரசு தலைவர் மாவையினை தோற்கடிக்க சதி செய்ததாக குற்றஞ்சுமத்தப்பட்ட நபரொருவர் தெல்லியூர் ஹரிகரன்.
நாளிதழ் பக்கமொன்றிடையே எட்டிப்பார்க்கும் பணியாளரான அவர் மாவையின் கோட்டையினுள் இருந்து சுமந்திரனின் வெற்றிக்கு பாடுபட்டமை அண்மையில் அம்பலமாக்கி ஆளை தூக்கியடிக்க மாவை முடிவு செய்துள்ளமை அனைவரும் அறிந்த செய்தி.
இந்நிலையில் ஒருபுறம் தமிழரசு காவடியெடுத்துவரும் தெல்லியூர் ஹரிகரன் இலங்கை இன அழிப்பு இராணுவத்திற்கு மாலை போட்டு அழகு பார்த்த விவகாரம் தமிழரசின் மற்றைய தரப்புக்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றது.
சுன்னாகத்தில் அரிமா கழக நிகழ்வில் படை அதிகாரிகளை அழைத்து மாலைபோட்டு அழகு பார்த்ததுடன் அவர் பெருமிதப்பட்டுக்கொண்ட விடயத்தை போட்டு துவைக்க தொடங்கியுள்ளனர் நெட்டிசன்கள்.
அண்மைக்காலமாக கொழும்பு ஆட்சி மாற்றத்தையடுத்து படை அதிகாரிகளை நிகழ்வுகளிற்கு அழைப்பது சம ஆசனம் வழங்குவது தமிழரசில் உச்சம் பெற்றுள்ளமை தெரிந்ததே.