März 28, 2025

ரணிலும் உள்ளே போகின்றார்?

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று (31) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளாரென அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆ​ணைக்குழுவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக, இந்த மாதம் 21ஆம் திகதி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைக்கப்பட்டிருந்த போதும், அன்றைய தினம் தன்னால் வரமுடியாது என்றும், இன்றே தன்னால் ஆஜராக முடியுமென ரணில் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்து​கொண்டிருந்தமை தொடர்பாக வாக்குமூலமளிக்கவே இன்று அழைக்கப்பட்டுள்ளதாகவும் ​தெரிவிக்கப்பட்டுள்ளது