März 28, 2025

உண்மையை சொல்லியடித்த ஊடகங்கள்!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று,

தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிகள் தொடர்பில் ஊடகங்களது ஆக்கபூர்வமான பங்களிப்பிற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் தமது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துள்ளன.குறிப்பாக தமிழ் அச்சு ஊடகங்களும் உண்மைகளை உரைத்து செய்திகளை தலைப்பு செய்திகளாக்கியிருந்தன.

குறிப்பாக யாழ்.நகரில் நடைபெற்ற பேரணியில் மக்களோடு மக்களாக அரசியல் பிரதிநிதிகள் பங்கெடுத்திருந்தனர்.

குறிப்பாக மாமனிதர் ரவிராஜ் பாரியார் ரவிராஜ் உரைத்த கடைசிச்சொற்களென தெரிவித்து தனது வாயினை சுலோகம் பொறிக்கப்பட்ட கறுப்பு சீலையால் கட்டியிருந்தார்.

வி.மணிவண்ணன்  தீடீரென களமிறங்கி அதிர்ச்சி மகிழ்ச்சியை கொடுத்தார்.

ஆரம்பம் முதலே சிறீதரன்,செல்வம் அடைக்கலநாதன்,சுரேஸ் பிறேமச்சந்திரன் என பலரும்  மக்களோடு மக்களாக நடந்து வந்திருந்தனர்.