November 26, 2024

1700 பில்லியன் ரூபாவுக்கான இடைக்கால கணக்கறிக்கை! பாதுகாப்பு அமைச்சுக்கு 174 பில்லியன் ஒதுக்கீடு

1700 பில்லியன் ரூபாவுக்கான இடைக்கால கணக்கறிக்கை! பாதுகாப்பு அமைச்சுக்கு 174 பில்லியன் ஒதுக்கீடு

மாகாணசபை தேர்தல்கள் அடுத்து வரும் மாதங்களில் நடத்தப்படவிருக்கும் நிலையில் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சித்துறை அமைச்சுக்கு அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே 1700 பில்லியன் ரூபாவுக்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்தநிலையில் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சித்துறை அமைச்சுக்கு 194 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்கு 174 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சுக்கு 136 பில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான நகர அபிவிருத்தி மற்றும் புத்தசாசன அமைச்சுக்கு முறையே 27 பில்லியன் ரூபாவும் 2.8 பில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

இதனை தவிர அரசாங்கத்தின் செலவீனங்களுக்காக 1.3 ரில்லியன் ரூபாவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கடன்கள் மூலம் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.