நஞ்சூட்டப்பட்ட ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் கோமாவில்!
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி நஞ்சூட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் கோமாவில் உள்ளார் என என்று அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.ஊழல் தடுப்பு பிரச்சாரகர் அலெக்ஸி நவல்னி ஒரு விமான பயணத்தின் போது நோய்வாய்ப்பட்டார் மற்றும் விமானம் ஓம்ஸ்கிலில் அவசர அவசரமாக தரையிறங்கியது. அங்கு அவர் கோமா நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். மேலும் அவர்கள் அவரது உயிரைக் காப்பாற்ற முயற்சிக்கின்றனர்.
விமான நிலைய ஓட்டலில் அவரது தேநீரில் ஏதோ (நஞ்சு) வைக்கப்பட்டுள்ளதாக அவரது குழு சந்தேகிக்கிறது.
திரு நவால்னிக்கு விரைவான மீட்டு வரவேண்டும் என்று கிரெம்ளின் கூறியது.
திரு நவல்னி, (வயது 44) ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கடுமையான விமர்சித்து வந்தவராவார்.
ஜூன் மாதத்தில் அவர் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பு ஒரு „சதி“ என்றும் „அரசியலமைப்பை மீறுவது“ என்றும் விவரித்தார். சீர்திருத்தங்கள் புடினுக்கு ஏற்கனவே இருந்த நான்கு பதவிகளுக்குப் பிறகு மேலும் இரண்டு பதவிகளை பதவியில் அமர்த்த அனுமதிக்கின்றன என்று கூறியவர்.