März 28, 2025

ரஷ்யாவில் ஜனாதிபதிக்கு புட்டின் எதிரிக்கு விமானத்தில் TEAல் கலந்து நஞ்சு கொடுக்கப்பட்டது

சற்று முன்னர் ரஷ்யாவில் அதிபர் புட்டினுக்கு எதிராக அரசியல் செய்து வந்த, அலேக்ஸ்சி நெவிலியன் என்ற அரசியல்வாதி அவரசமாக வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டார். அவர் விமானத்தில் ஏற முன்னர், அல்லது விமானத்தினுள் வைத்து டீ குடித்துள்ளார். அந்த தேனீரில் நஞ்சு மருத்து கலக்கப்பட்டுள்ளது என்ற அதிரும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் புட்டினை எதிர்த்து எவரும் அரசியல் செய்ய முடியாது. அப்படி செய்தால் அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் சாவு தேடி வரும். ஆனால் அது இயற்கையான சாவு போல இருக்கும். உண்மையில் அப்படி அல்ல. புட்டின் தான் இந்த கொலைகளுக்கு முக்கிய காரணம். ரஷ்ய உளவாளி ஒருவர், சில வருடங்களுக்கு முன்னர் லண்டனில் தஞ்சமடைந்தார். அவருக்கு பிரித்தானிய உளவு துறையான எம்.ஐ5 பாதுகாப்பு கொடுத்து அவரை மிகவும் பத்திரமாக வைத்திருந்தது.

ஒரு நாள் அவர் தனது பெண் நண்பியோடு பப்புக்கு சென்று ஒரு கிளாஸ் வைன் குடித்தார். அவ்வளவு தான். அந்த வைனில் பொலோனியம் என்னும் கதிரியக்க நச்சு பொருள் கலக்கப்பட்டது. உடல் எல்லாம் பொக்களம் பொக்களமாக வந்து துடி துடித்து அவர் இறந்து போனார். தற்போது ரஷ்ய மண்ணில் வைத்தே இந்த அரசியல்வாதிக்கு நஞ்சு கொடுத்துள்ளார்கள், மிகவும் கடுமையாக பாதிப்படைந்துள்ள இந்த அரசியல்வாதி பிழைப்பாரா என்று தெரியவில்லை.