தலைவர் மஹேல, உறுப்பினர் சங்கா
தேசிய விளையாட்டுச் சபையின் தலைவர் பதவிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் இந்த நியமனம் இன்று வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்த சபையின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் ஆலோசகர்களான முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் குமார் சங்கக்கார, நீச்சல் வீரர் ஜுலியங் போலிங், மோட்டார் கார் வீரர் டிலந்த மாலகமுவ மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரும் அடங்குகின்றனர்