விளையாட்டினுள் இராணுவம்?
விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றவுடனேயே நாமல் ராஜபக்ச திட்டமிட்டிருந்த தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று குறித்த நியமனத்தினை வழங்கியுள்ளார்.
குறித்த பேரவையின் 14 உறுப்பினர்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககராவும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.
இன்னும் பல தேசிய விளையாட்டு முன்னாள் நட்சத்திரங்களோடு வர்த்தகத்துறையில் வெற்றி பெற்ற பிரமுகர்கள், இராணுவ அதிகாரிகள் ஆகியோரும் உள்ளடங்கியுள்ளனர்.
14 உறுப்பினர்களினதும் விபரங்கள்
?குமார் சங்கக்கார
?ஜூலியன் பொல்லிங் (நீச்சல் வீரர்)
செயலாளர் :
?தியுமி அபேசிங்க (டெனிஸ் வீரர்)
?டிலந்த மலகமுவ (பந்தய வீரர்)
?யஸ்வந்தன் முத்தேகெத்துகம (கூடைப்பந்து வீரர்)
?சவேந்திர சில்வா (இராணுவ தளபதி)
?ராஜித அம்பேமோஹொட்டிய (மேஜர்)
?கஸ்தூரி வில்சன் (ஹேமஸ் CEO)
?ரொஹான் பெர்னாண்டோ (SLT CEO)
?ருவான் கெரகல (MAS Director)
?சுபுன் வீரசிங்க (Dialog CEO)
?சஞ்சீவ வீக்ரமநாயக்க (EWIS தலைவர்)
?எதிரிசிங்க (விளையாட்டு பணிப்பாளர்)
?ரொவீனா சமரசிங்க (விளையாட்டு சட்டத்தரணி)