எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தின் புனித சின்னத்திரேசம்மாள் யுவதிகள் மன்றத்தின் ஏற்பாட்டில் ஒரு மரம் நாட்டுவிழா இடம்பெற்றது
இளையோர் மத்தியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இ பங்குத்தந்தை அருட்திரு கென்றி எரோணியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் குறித்த மரநடுகை செயற்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஊர்காவற்றுறை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி.காசிநாதன் நிருபா வும் சிறப்பு விருந்தினராக ஊர்காவற்றுறை பிரதேச சபை பிரதம முகாமைத்துவ உதவியாளர் திருமதி. கண்ணதாசன் பிரபாவதி யும் கெளரவ விருந்தினர்களாக ஊர்காவற்றுறை திருக்குடும்ப அருட்சகோதரிகள் மாக்கிறேட் அம்புறோசியா ஊர்காவற்றுறை பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் பிரதேசசபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
புனித தோமையார் ஆலய அருட்பணிச்சபை செயலாளர் பக்திசபைகளின்அங்கத்தவர்கள் பாடசாலை ஆசிரியர்கள் ஏனைய கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எழுவைதீவு மறுமலர்ச்சி கழக நிர்வாகத்தினர் கடற்படை அதிகாரிகளும் நலன்விரும்பிகளும் கலந்துகொண்டு மரங்களை நாட்டினார்கள். இம்மரநாட்டுதல் விழாவுக்குரிய மரக்கன்றுகளை Lava Care சார்பில் அதன்பணிப்பாளர் வைத்தியர் யதுநந்தனன் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.