புதைகுழிகளை மூடும் கோத்தா அரசு?
இலங்கை அரச படைகளால் அரங்கேற்றப்பட்டதாக நம்பப்படும் இனஅழிப்பு படுகொலை செய்திகளை கட்டுப்படுத்த கோத்தபாய அரசு மும்முரமாகியுள்ளது.
யாழ்ப்பாணம் கொட்டடியில் எலும்புக்கூடுகள் காணப்பட்ட பகுதிகளில் அகழும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் அகழும் பணி தொடர்பில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக நீதிமன்றத்தில் பொலிஸார் அறிக்கை சமர்ப்பித்து அகழ்விற்கு அனுமதி எடுத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று (18) அகழ்வு பணிகள் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மற்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
எனினும் இது தொடர்பில் புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அகழ்வு பணி இடத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது