வீடற்ற 14000 பேருக்கு 4 மாதங்களில் புதிய வீடு வழங்கப்படும்!
உங்களுக்கு ஒரு வீடு – நாட்டிற்கு எதிர்காலம் என்ற திட்டத்தின் கீழ் வீடுகள் அற்ற குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அற்கமைய வீடுகள் அற்ற 14000 பேருக்கு 4 மாதங்களில் வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாக, கிராமிய வீடு மற்றும் நிர்மாணிப்பு மற்றும் கட்டட பொருள் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் இந்தக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த வீடமைப்பு திட்டம் தடைப்பட்டுள்ளது. அதன் நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நிர்மாணிப்பு துறையில் ஈடுபடுவதற்கான வசதிகள் ஏற்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.