தேசியம் காக்க வெள்ளையும் சொள்ளையுமாக?
புதியதொரு அரசியல் மாற்றங்கள் நடக்கின்ற போதெல்லாம் இ;ப்படி வெள்ளையும் சொள்ளையுமாக ஒரு அணி இறங்குவது வழமையென்கின்றன ஊடக தரப்புக்கள்.
ஏற்கனவே யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாரிற்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியை நேரடியாக கோத்தபாயவிடம் போய் கோரிய விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில் சுமந்திரன் -மாவை முறுகலை தீர்த்து வைக்க மருத்துவ பீடாதிபதி ரவிராஜ் தலைமையில் குழு ஒன்று களமிறங்கியுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக காத்திருக்கின்ற ரவிராஜ்ஜிற்கு ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
ஏற்கனவே ஆத்மார்த்தமான மருத்துவ அணியொன்று தமிழ் மக்கள் பேரவையில் பங்காற்றிய போது திருட்டு மௌனம் காத்த இத்தரப்புக்கள் தேர்தலின் பின்னராக தற்போது புதிய அரசியல் அணி ஒன்று முகிழ்ப்பது தொடர்பான விடயம் சூடுபிடித்துள்ள நிலையில் களமிறங்கியமை அவர்களது நோக்கத்தை தெளிவுபடுத்தியுள்ளது.
அதிலும் அரச பதவியில் இருப்பதால் அரசியல் பேச முடியாதென அடிக்கடி சொல்லி பதுங்கியுள்ள இத்தரப்பு தற்போது எதற்காக வெளியே வந்ததென்ற கேள்வி உள்ளது.
புதியதொரு அரசியல் கூட்டு முகிழ்ப்பதை இலங்கை அரசு வெறுக்கின்றது.இதனால் மீண்டும் சுமந்திரனிற்கு கொம்பு சீவ மாவையை ஆசை காட்டி அழைத்துவர முயற்சிகள் நடப்பதாக உள்வீட்டு தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே மாவையின் அனுமதியுடன் அவரது மகன் கலையமுதன் அண்மையில் சி.வி.விக்கினேஸ்வரனை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.