November 21, 2024

ஜேர்மனியில் 3.5 மில்லின் குழந்தைகள் திரும்பினர்

பெர்லின், பிராண்டன்பேர்க், ஷெல்ஸ்விக்-ஹால்ஸ்டீன் மற்றும் நோர்த் ரைன்-வெஸ்ட்பாலியா ஆகிய நான்கு கூட்டாட்சி மாநிலங்களில் 3.5 மில்லியன் குழந்தைகள் ஐந்து மாதங்களில் முதல் முறையாக தங்கள் பாடசலைகளுக்குத் திரும்பியுள்ளனர்.இதனால் ஜேர்மனி தனது மிகப் பெரிய பொது சுகாதார பரிசோதனையை இன்று திங்களன்று தொடங்குகிறது.

பெரும்பாலான மாநிலங்களின் சுகாதார நடவடிக்கைகள், சமூக விலகல் விதிகளை பொதுவாகக் கொண்டுள்ளன. ஆனால் முகக்கவசங்கள் அணிவது தொடர்பில் கருத்து வேறுபாடு உள்ளது.

மேற்கு மாநிலமான வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள 2.5 மில்லியன் மாணவர்கள் வகுப்பறை உட்பட மூடப்பட்ட பகுதிகளில் முகமூடிகளை அணிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இதற்கிடையில், பேர்லின், பிராண்டன்பேர்க் மற்றும் ஷெல்ஸ்விக்-ஹால்ஸ்டீன் ஆகிய முகமூடிகளை கொறிடோர், ஆடை அறைகள் மற்றும் கழிப்பறைகளில் அணிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஷெல்ஸ்விக்-ஹால்ஸ்டீனின் கல்வி அமைச்சர் எல்லா நேரங்களிலும் முகமூடிகளை அணிய வேண்டும் ஆனால் இது ஒரு பரிந்துரை மற்றும் விதி அல்ல எனக் கூறியுள்ளார்.

வகுப்பறையில் முகமூடி பயன்பாடு தேவையில்லை என்பதில் பெரும்பான்மையான மாநிலங்களைப் பின்பற்றுவதாக பேர்லின் மாநில கல்வி அமைச்சர் சாண்ட்ரா ஷீரெஸ் கூறினார்.