Mai 12, 2025

கலையரசனுக்கு வழக்கப்பட்ட தேசியப்பட்டியல் நிறுத்தப்பட்டது!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தில் சடுதியான திருப்பம் ஏற்பட்டுள்ளது. பரவலாக எழுந்த எதிர்ப்பையடுத்து, அம்பாறைக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அம்பாறையை சேர்ந்த த.கலையரசனை தேசியப்பட்டியல் எம்.பியாக்குவதாக குறிப்பிட்ட கடிதத்தை, தேர்தல்கள் திணைக்களத்திற்கு அனுப்பாமல் தாமதிக்கும்படி கட்சியின் செயலாளரிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, கலையரசனை தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு நியமிக்கும் முடிவை தற்காலிகமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்தி வைத்துள்ளது.