November 23, 2024

மாவைக்கு சந்தர்ப்பம்: மகளிரணி கோரிக்கை!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டமைப்பினை புரட்டிப்போட்டுள்ள நிலையில் எம்.ஏ.சுமந்திரன் தொடர்பில் கட்சி அனைத்து

மட்டங்களிலும் சீற்றம் ஏற்பட்டுள்ளது.கட்சி தலைவராக மாவையினையோ செயலாளர் துரைராஜசிங்கத்தையோ செயற்பட விடுக்காத சுமந்திரன் தற்போது தோல்விக்கு மட்டும் அவர்கள் இருவரையும் பொறுப்பேற்க சொல்வது நியாயமற்றதென மதமிழரசுக்கட்சியின் உபதலைவி மிதிலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை  தெரிவித்துள்ள அவர்  தேசியப்பட்டியல் ஆசனத்தை மாவை சேனாதிராசாவுக்கு வழங்கவும் அவர் கோரியுள்ளார்.

இதனிடையே கூட்டமைப்பின் தோல்விக்கு முழுமையாக பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் பொறுப்பேற்கவேண்டுமென தெரிவித்த அவர் அவர் தனது வாயை மூடிக்கொண்டிருந்தால் இத்தகைய தோல்வி ஏற்பட்டிருக்காதெனவும் தெரிவித்தார்.

இதனிடையே தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனுடன் பேச்சு நடத்துவதற்கு தமிழரசுக்கட்சியின் குழு ஒன்று இன்று நேரம் ஒதுக்கியிருப்பதாகவும் தெரியவருகிறது.

அதேபோல தமிழ் தேசியக் கட்சியின் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் சிறீகாந்தாவுடனும் பேச்சு நடத்த தமிழரசுகட்சியின் இளையவர்கள் தயாராகியிருப்பதாகவும் இன்று குறித்த சந்திப்பு இடம்பெற்றும் என்றும் தெரியவந்துள்ளது.

தமிழரசுக்கட்சியின் தலைமை மாற்றம் தொடர் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் நேற்று கிளிநொச்சி ஊடகவியலாளர் சந்தப்பில் சிவஞானம் சிறீதரன் அனைவரும் சேர்ந்து தன்னிடம் தலைமையை தந்தால் ஏற்று நடத்த தயார் என்று தெரிவித்திருந்தமையும் தமிழரசுகட்சியின் மூத்த தலைவர்களின் நடவடிக்கைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது