கொரோனா அதிகரித்ததைத் தொடர்ந்துபிரித்தானியாவில் கடும் கட்டுப்பாடு!
கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்ததைத் தொடர்ந்து பிரித்தானியா மற்றும் ஸ்காட்லாந்தில் கூடுதலாக உட்புற இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
இரு நாடுகளிலும் அருங்காட்சியகங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அக்குவாரியம் ஆகிய உட்புற இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பிற புதிய இடங்களான சினிமாக்கள், இறுதி சடங்கு நடக்கும் இல்லங்கள் மற்றும் ஸ்காட்லாந்தில் வங்கிகள், அழகு நிலையங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
திங்கள்கிழமை முதல் வடக்கு அயர்லாந்தில் உள்ள அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் கட்டாயமாகிவிடும்.
பிரித்தானியாவிற்கு வருகை தரும் பயணிகளுக்கான புதிய தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் வந்ததை தொடர்ந்து இந்த முகக்கவச கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம், அன்டோரா மற்றும் பஹாமாஸில் இருந்து இப்போது பிரித்தானியா, ஸ்காட்லாந்து அல்லது வடக்கு அயர்லாந்திற்கு வரும் அனைத்து பயணிகளும் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்.
முன்னதாக ஸ்பெயின் மற்றும் லக்சம்பேர்க்கில் இருந்து வந்த பயணிகளுக்கு தனிமைப்படுத்தல்கள் மீண்டும் விதிக்கப்பட்டன.