Mai 1, 2024

அமெரிக்காவுக்கு கட்டாயம் பதிலடி கொடுப்போம்..! சீனா

தங்கள் நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுத்தால் பதிலடி கொடுப்போம் என சீனா சபதம் செய்துள்ளது.

நாட்டில் இருக்கும் சீன ஊடகவியலாளர்கள் 90 நாட்கள் மட்டுமே தங்க அனுமதிப்படுவார்கள் என மே 11ம் திகதி அன்று அமெரிக்கா அதிரடி உத்தரவிட்டது.

விசாக்களை அமெரிக்க நீட்டிக்கப்படாவிட்டால், சீன ஊடகவியலாளர்கள் எதிர்வரும் நாட்களில் வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சீன ஊடகவியலாளர்களுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து விரோத நடவடிக்கை மேற்கொண்டால் பதிலடி கொடுப்போம் என சீனா உறுதி அளித்தது.

அமெரிக்காவில் இருந்து எந்த சீன பத்திரிகையாளருக்கும் விசா நீட்டிப்பு வழங்கப்படவில்லை என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறினார்.

அமெரிக்க சீன ஊடகவியலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது, உடனடியாக தனது தவறை சரிசெய்து அதன் செயல்களை நிறுத்த வேண்டும்.

அமெரிக்க தனது அட்டூழியத்தை தொடர்ந்தால், சீனா தனது உரிமைகளைப் பாதுகாக்க தேவையான மற்றும் நியாயமான பதிலடியை கொடுக்கும் என்று அவர் கூறினார்.