März 28, 2025

கடந்த 9 ஆண்டுகளுக்கு பின்னர் வாக்களித்த மஹிந்த தேசப்பிரிய!

அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களும் மிகவும் பாதுகாப்பானது என்பதை காண்பிப்பதற்காகவே தான் இம்முறை வாக்களிக்க வந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எனவே, அனைவரும் வருகை தந்து தங்களுடைய வாக்குகளை பதிவு செய்யுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பம்பலபிட்டிய லின்சே மகளிர் பாடசாலையில் இன்று (புதன்கிழமை) வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனக்கு 65 வயதாகியும் வாக்களிக்க வந்தமைக்கான காரணம் வாக்கெடுப்பு நிலையம் பாதுகாப்பனது என காண்பிப்பதற்காகவே என தெரிவித்துள்ள அவர், இதனாலேயே 2011ஆம் ஆண்டிக்கு பின்னர் வாக்காளராக வாக்களிக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே அனைவரும் எவ்வித அச்சமும் இன்றி வாக்களிக்க வருமாறும் அவர் தெரிவித்துள்ளார்.