November 21, 2024

காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களும் களத்தில்?

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் கூட்டமைப்பின் பொறுப்பற்ற தன்மை தேர்தலில் எதிர்ப்பலைகளை தோற்றுவித்துள்ளது.
இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமது உறவுகளின் உண்மைநிலையை வெளிப்படுத்துவதற்கு சர்வதேசம் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தின் போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்,அரசியல்வாதிகள் எமது பிரச்சனைகளை தீர்த்துவைப்பதற்கு தவறியுள்ளனர். அந்த வகையில் சர்வதேசநீதியை கோரிநாம் போராடி வருகின்றோம்.
இன்று தமிழர்களிற்கு எதிராகவும் தமிழ்த் தேசியத்திற்கெதிராகவும் பலர் பேசிக்கொண்டிருக்கின்றனர். தமிழ்த்தேசியத்திற்காக பாடுபடுகின்ற கட்சிகளில் ஒட்டுக்குழுக்களாக இருந்தவர்களும் பயணிக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் விமர்சித்துவருகின்றனர்.
தமிழ்மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பவர்களாக இருப்பவர்களையே நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
இன்று வீடுவீடாக சென்று மக்களிடம் வாக்கு கேட்கின்றார்கள். தமது பணிகளை சரியாகசெய்திருந்தால் வீடுவீடாக செல்ல வேண்டிய தேவை இல்லை. எனவே hரை  நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என்று மக்களுக்கு நன்கு தெரியுமெனவும் எனவும் தெரிவித்திருந்தனர்.