ஆமாப்பு சுமா கேட்டது 10 பில்லியன்?
தன்னைக் குறித்துப் பொய்ச் செய்தி வெளியிட்ட சிங்கள ஊடகங்களுக்கு எதிராக சுமந்திரன் இன்று மான நஷ்ட வழக்குப் பதிவு செய்தார்!
சென்ற வருடம் ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்கள் இருந்த போது, நவம்பர் 11 ஆம் திகதி, சிங்களப் பத்திரிகைகளான அருண மற்றும் மவ்பிம ஒரு செய்தியைத் தாங்கி வந்தன. ‘சிங்களவர்களைத் தோற்கடிக்க சஜித்துக்கு வாக்களிப்பதே ஒரே வழி – என்கிறார் சுமந்திரன்’ என அச் செய்திக்குத் தலைப்பிடப்பட்டிருந்தது.
அருண பத்திரிகை தெரண தொலைக்காட்சிக்குச் சொந்தமானது. மவ்பிம ஞாயிற்றுக் கிழமையொன்றில் 380,000 பிரதிகளை விற்றுத் தள்ளும் முக்கிய சிங்களப் பத்திரிகை. மவ்பிம பத்திரிகையில் முதற்பக்கத் தலைப்புச் செய்தியாக சுமந்திரனின் புகைப்படத்தோடு இச் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. முல்லைத் தீவில் இடம்பெற்ற சஜித் ஆதரவுப் பிரச்சாரக் கூட்டமொன்றில் இக் கருத்தை சுமந்திரன் தெரிவித்ததாக செய்தி சொல்லியது.
சுமந்திரன் இந்தக் கருத்தையோ, இதன் தொனியிலமைந்த கருத்தையோ எந்த
இடத்திலும் தெரிவித்திருக்கவில்லை.
உடனே தன் சமூக வலைத்தளங்களூடாக இச் செய்தியை நிராகரித்தார். எந்தவித ஆதாரமும் இல்லாச் செய்தியென்பதைப் பதிவு செய்தார்.
ஆனால் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் இருக்கும் போது, நவம்பர் 13 ஆம் திகதி, சீலோன் டுடே எனும் ஆங்கிலப் பத்திரிகையும் இதே செய்தியை தன் முதற்பக்கத் தலைப்புச் செய்தியாகத் தாங்கி வந்தது. இது ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகத் தாக்குதல் (coordinated media operation) என்பது தெளிவாகத் தெரிந்தது.
சிலோன் டுடே, அருண, தெரண பத்திரிகைகளின் மீது இலங்கைப் போலீஸ் மா அதிபரிடமும், தேர்தல் ஆணைக்குழுவிடமும் உடனே முறைப்பாடுகளைச் செய்தார். பத்திரிகைகளின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்தார். ஒவ்வொரு பத்திரிகைகளிடம் மான நஷ்ட ஈடாக 10 பில்லியன் ரூபாய் கோரி கடிதம் அனுப்பி இருந்தார்.
அவர்களது பதிலளிக்கும் காலக்கெடு முடிந்ததும், இன்று (29 ஜூலை 2020) இந்த மூன்று பத்திரிகைகளுக்கும் எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று தனித்தனியாக மொத்தம் மூன்று மான நஷ்ட வழக்குகளைத் தாக்கல் செய்தார்.