November 22, 2024

ஆவாவிற்கும் அங்கீகாரம்?

வடக்கு கிழக்கில் ஒட்டுக்குழுக்களை மட்டுமின்றி வன்முறையாளர்களையும் தமிழ் மக்களின் தலைவராக்க ராஜபக்சே குடும்பம் முயற்சிக்கிறது.

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி திரு ரணசிங்கே பிறேமதாசா அவர்களின் விசுவாசியான அங்கயன் இராமநாதன் குடும்பத்தினர் 2000 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலங்களிலேயே கொழும்பில் துப்பாக்கி ஏந்தி வன்முறையில் ஈடுபட்ட வரலாற்றை கொண்டவர்கள்.
ஆனால் கடந்த சில வருடங்களாக இராமநாதனின் சகோதரனான இராசுக்குட்டி என அறியப்பட்ட வர்த்தகரை ராஜபக்சே சகோதரர்கள் தமது குடும்ப வியாபாரத்தை வளர்த்துக்கொள்ள பயன்படுத்தி வருகிறார்கள். கோத்தபாயா ராஜபக்சே அவர்களால் உருவாக்கபட்ட பிள்ளையான் குழு இராசுக்குட்டி அவர்களை கப்பம் பெறும் நோக்கில் கடத்த இலக்கு வைத்த சூழ்நிலையில் இந்த கடத்தல் மகிந்த ராஜபக்சே அவர்களின் நேரடி தலையீட்டால் தடுக்கப்பட்டதாக சொல்லுகிறார்கள். இதன் மூலம் ஏற்பட்ட நெருக்கத்தின் பின்னணியில் ஐக்கிய தேசிய கட்சி விசுவாசியாக இருந்த அங்கயன் இராமநாதன் குடும்பம் ராஜபக்சே சகோதரர்களின் விசுவாசியானதாக சொல்லப்படுகிறது . இதன் தொடர்ச்சியாகவே ராஜபக்சே குடும்பத்தால் அங்கயன் இராமநாதன் யாழ்ப்பாண அரசியல் களத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்
இவ்வாறு யாழ்ப்பாண அரசியல் களத்திற்கு அழைத்து வரப்பட்ட அங்கயன் இராமநாதன் குடும்பம் யாழ்ப்பாணத்திலும் வன்முறை வெறியாட்டம் நடத்தி வருகிறது. 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தல் காலத்தில் அங்கயன் தரப்பும் EPDP ஐ சேர்ந்த யோகேஸ்வரி பற்குணராஜா குழுவும் நேரடியாகவே ஒருவரை ஒருவர் துப்பாக்கிகளால் சுடுபட்டனர்.
அதே போல 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபை தேர்தல் காலத்தில் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவின் நெருங்கிய சகாவாக கருதப்பட்ட சர்வானந்தன் எனும் சொந்த கட்சி வேட்பாளர் மீது அங்கயன் குழுவினர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டனர் . இச்சம்பவத்தில் சர்வானந்தன் தரப்பு ஆதரவாளர் ஒருவர் படுகாயமடைந்தார்.
அரசியலை வெறும் வியாபாரமாக கருதும் அங்கயன் தரப்பு இலங்கை பல்கலை கழகம் ஒன்றில் கல்வி கற்க கூட தகுதி பெறாத தனது மச்சானையும் சித்தப்பா மகனையும் பல்கலைக்கழக பேரவைக்கு ராஜபக்சே சகோதரர்களின் துணையுடன் நியமித்து இருக்கிறார்கள்
இதுமட்டுமில்லாது தமிழ் மக்களை தொடர்ச்சியாக நெருக்கடிக்குள் வைத்து இருக்கும் நோக்கில் இலங்கை இராணுவத்தால் உருவாக்கபட்ட ஆவா குழுவை சேர்ந்த கஞ்சா கடத்தல் பேர்வழி ஒருவரை வேட்பாளராக்கி தமிழ் மக்களின் தலைவராக்க முயற்சிக்கிறார்கள் . தெற்கில் போதை பொருளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாக சொல்லும் ராஜபக்சே குடும்பம் வடக்கில் வன்முறையாளர்களையும் கஞ்சா வியாபாரிகளையும் அப்பாவி தமிழ் மக்களின் தலைவராக்க முயற்சிப்பது ஏன் ?
படம் : ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த அமைச்சர் சமல் ராஜபக்சே அவர்களுடன் ஆவா குழுவை சேர்ந்த கஞ்சா வியாபாரி