கூட்டணி சொத்து விபரங்களைப் பொதுமக்கள் பார்வையிடலாம்!
தேர்தலின் முன்னரும் தேர்தலின் பின்னரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் யாரும் மக்கள் பார்வைக்காக யாழ்ப்பாணத்தில் 232, கோவில் வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றைப் பார்வையிட விரும்புவோம் முன் அனுமதியுடன் அவற்றை பார்வையிடலாம்.
தேர்தலில் வெற்றி பெறும் ஒருவர் வேட்பாளரார் தான் தேர்தலின் முன்னர் எவ்வளவு சொத்துக்களை வைத்திருந்தார் என்பதையும் தேர்தலில் வெற்றிபெற்றி பெறும் ஒருவர் பாராளுமன்ற பதவிக் காலத்தில் எவ்வளவு சொத்துக்களை சேர்த்தார் என்பதையும் பதவித் துஸ்பிரயோகம் அல்லது முறைகேடுகள் மூலம் சொத்துக்களை சேகரித்தாரா என்பதையும் இதன் மூலம் அறிய முடியும்.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஊடாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் தமது மாதாந்தம் கிடக்கும் கொடுப்பனவுகளில் 8 விழுக்காட்டினை பொதுமக்களின் நல்வாழ்வு திட்டங்களுக்காகக இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அவர்கள் விரும்பிய ஒரு அறக்கட்டளை நிதியத்துக்கு மாதாந்தம் வழங்க வேண்டும்.
தமிழ் மக்கள் நம்பிக்கைப் பொறுப்பு நிதியமாகவும் அமையலாம். அதேவேளை, ஆகக்குறைந்தது 2 சதவீதத்தினை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுவான செலவீனங்களுக்காகவும் வழங்கவேண்டும் என முடிவு செய்யபட்டுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டணி அறிவித்துள்ளது.