November 22, 2024

சிறீதரன் அலுவலகத்தில் இராணுவ புலனாய்வு பிரிவு?

கிளிநொச்சியில் தேர்தல் களத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் வெற்றிக்காக பாடுபடும் கும்பலில் இராணுவ புலனாய்வு முகவர்கள் பலரும் நிரம்பி வழிவதாக முன்னாள் போராளிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் சி.சிறீதரனின் வட்டகச்சி தேர்தல் பிரச்சாரத்தினை வேடிக்கை பார்க்க சென்ற விடுதலைப்புலிகள் அமைப்பின் தீவிர ஆதரவாளர் ஒருவர் கைதாகியுள்ளார்.
குறித்த ஆதரவாளர் யுத்த முடிவின் பின்னராக இந்தியாவிற்கு தப்பி சென்று அண்மையலேயே  ஊர் திரும்பியிருந்தார்.
சி.சிறீதரனின் வட்டகச்சி தேர்தல் பிரச்சாரத்தினை வேடிக்கை பார்க்க சென்றபோதே அவரை அடையாளம் கண்ட சி.சிறீதரன் கட்சி அலுவலகத்திற்கு வருகை தர அழைப்புவிடுத்துள்ளார்.
இதனையடுத்து கிளிநொச்சி நகரிலுள்ள சி.சிறீதரன் அலுவலகத்திற்கு வந்திருந்த போது அவரை சிறீதரனின் ஆதவாளரொருவர் அவரை அடையாளம் கண்டு புனை பெயரை கூறி அழைத்து பேசியுள்ளார்.
கட்சி அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே அவரை வழிமறித்த இராணுவ புலனாய்வு பிரிவினர் அவரை அதே புனைபெயர் கொண்டு அழைத்து கடத்தி சென்றுள்ளனர்.
தன்னை சி.சிறீதரன் அலுவலகத்திலுள்ளவர்களே அடையாளம் கண்டிருந்ததாக தெரிவித்த குறித்த ஆதரவாளர் தற்போது சிறையிலுள்ள நிலையில் சி.சிறீதரனின் அலுவலகத்தில் புலனாய்வாளர்களே உள்ளதாக தகவல் வழங்கியுள்ளார்.
இதனிடையே அவரை இயக்கச்சி குண்டு வெடிப்புடன் தொடர்புபட்ட முன்னாள் போராளியுடன் தொடர்புபடுத்தி கைதினை அரசு அறிவித்துள்ளது.
எனினும் இயக்கச்சி குண்டு வெடிப்பின் முன்னரே குறித்த ஆதரவாளர் கைது செய்யப்பட்டதாக குடும்பத்தவர்கள் தெரிவிக்கின்றனா.
இதனிடையே நேற்றிரவு சி.சிறிதரனின் ஆதரவாளர்கள்; கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் பொதுமக்களை தாக்கியுள்ளனர்.
தேர்தல் விதிகளை மீறி நோட்டீஸ் ஒன்றை வீட்டு கேற்றில் ஒட்ட முற்பட்டபோது வீட்டின் உரிமையாளர் தடுத்திருக்கின்றார்.இதனையடுத்து உரிமையாளரையும் உரிமையாளரின் மனைவியையும் சி.சிறீதரன் ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான மனைவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.