உண்மையில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்..! ஆய்வு மேற்கொண்டு வரும் பிரித்தானியா பேராசிரியர் வெளியிட்ட முக்கிய தகவல்
கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிடப்படலாம் என்பது சாத்தியமானது, ஆனால் அது நடக்கும் என்பதில் உறுதியில்லை என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசிக்கான முன்னணி ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான சாரா கில்பர்ட் கூறினார்.
அஸ்ட்ராஜெனெகாவுக்கு உரிமம் பெற்ற சோதனை தடுப்பூசி ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனைகளில் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியது, இதை உறுதிப்படுத்தும் தரவு திங்களன்று காட்டப்பட்டது.
இது இந்த ஆண்டின் இறுதிக்குள் பயன்பாட்டில் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையை எற்படுத்தி இருக்கிறது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி வெளியிடுவதற்கான இலக்காக இருக்கிறது, இது சாத்தியம், ஆனால் அது குறித்து எந்தவிதமான உறுதியும் இல்லை, ஏனென்றால் எங்களுக்கு மூன்று விஷயங்கள் நடக்க வேண்டும்.
தாமதமான நிலை சோதனைகளில் தடுப்பூசி சிகிச்சையளிக்கும் என்பதை காட்ட வேண்டும், பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் மற்றும் அவசரகால பயன்பாட்டிற்கு உரிமம் வழங்க கட்டுப்பாட்டாளர்கள் விரைவாக ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது என சாரா கில்பர்ட் கூறியுள்ளார்.