November 22, 2024

அமெரிக்காவின் தடைகளை மீறி இதை செய்து முடிப்போம்: ஈரான்

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும், ஈரான் தனது எண்ணெய் தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதில் உறுதியாக உள்ளது என்று ஈரானிய எண்ணெய் அமைச்சர் பிஜான் ஜங்கனே தெரிவித்தார்.

நாங்கள் எந்த சூழ்நிலையிலும் சரணடைய மாட்டோம், நாங்கள் எங்கள் திறனை அதிகரிக்க வேண்டும்.

எனவே தேவைப்படும்போது முழு வலிமையுடன் நாம் சந்தையில் களமிறங்கி எங்கள் சந்தைப் பங்கை அதிகரிப்போம் என்று ஜங்கனே கூறினார்.

2018-ல் ஈரானின் 2015 அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க வெளியேறியதிலிருந்து அமெரிக்க மீண்டும் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தியது.

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி நாளொன்றுக்கு 100,000 முதல் 200,000 பீப்பாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது ஏப்ரல் 2018-ல் ஈரான் அனுப்பிய 2.5 மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய்களிலிருந்து குறைந்தது.

ஈரானின் கச்சா உற்பத்தி நாளொன்றுக்கு சுமார் 2 மில்லியன் பீப்பாய்களாக குறைந்துள்ளது.