November 22, 2024

அமெரிக்காவில் மரணதண்டனை நிறுத்தம்..! வெளியான காரணம்

அமெரிக்காவின் இந்தியானாவில் உள்ள நீதிமன்றம், தண்டனை பெற்ற கொலையாளியை மரணதண்டனை செய்வதை நிறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் அவர் இறப்பதைக் காண தொற்றுநோய்களின் போது பயணிப்பதைப் பற்றி கவலைப்படுவதாகக் கூறினர்.

டேனியல் லீ-க்கு திங்களன்று தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது, இது 17 ஆண்டுகளில் முதல் மரணதண்டனை ஆகும்.

ஆர்கன்சாஸில் துப்பாக்கி வியாபாரி, அந்த நபரின் மனைவி மற்றும் அவரது எட்டு வயது மகள் ஆகியோரைக் கொன்ற வழக்கில் குற்றவாளியான டேனியல் லீ-க்கு மரண தண்டனன விதிக்கப்பட்டது.

லீயின் பாட்டி எர்லின் பீட்டர்சன், மரணதண்டனைக்கு பயணிப்பதன் மூலம் தன்னை ஆபத்தில் ஆழ்த்த விரும்பவில்லை என்று கூறினார்.

81 வயதான அவர் எப்போதும் மரண தண்டனையை எதிர்த்து வருகிறார், மேலும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் லீ-க்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

அமெரிக்க நீதித்துறை, நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது, மரணதண்டனைகளில் கணிசமான திட்டமிடல் மற்றும் 10-க்கும் மேற்பெட்ட ஊழியர்கள் செயல்பாடு ஆகியவை அடங்கும் என்று வாதிட்டனர்.