November 22, 2024

தென்னிலங்கையில் ஊடகவியலாளர் கைது?

வடக்கை தொடர்ந்து தெற்கிலும் ஊடக அடக்குமுறை தலைவிரித்தாட தொடங்கியுள்ளது.

உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒரு புகைப்பட ஊடகவியலாளரின்; கடமைகளைத் தடுத்ததற்காக இலங்கையின் சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவர் யுஆர்டி சில்வா, போலீஸ் போதைப்பொருள் பணியகத்தின் முன்னாள் பொறுப்பதிகாரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி கருத்து வெளியிடுகையில் யு.ஆர் டி சில்வா, நீதிமன்ற வளாகத்தில் திரு. நியோமல் ரங்கஜீவாவின் நடவடிக்கைகள் அச்சுறுத்தலாக உள்ளன என்று கூறினார்.
நியோமல் ரங்கஜீவா கடமைக்காக நீதிமன்ற வளாகத்திற்கு வரவில்லை என்றும், அவர் ஒரு பிரதிவாதியாக நீதிமன்றங்களுக்கு வந்ததாகவும் கூறினார்.
அத்துடன் தொழில்முறை பத்திரிகையாளர்கள் நீதிமன்றங்களுக்கு வெளியே தமது பணியை முன்னெடுக்க அனுமதிக்கப்படுவதாகவும், இதற்கு சட்டரீதியான தடையாக இல்லை என்றும் கூறினார்.
தடய பொருளாக கைப்பற்றப்பட்ட போதைபொருளை விற்பனை செய்து கோடீஸ்வர்கள் ஆகிய குற்றத்தில் கைதாகியுள்ள பொலிஸ் அதிகாரிகளை புகைப்படம் பிடித்ததற்காக ஊடகவியலாளர் ஒருவர் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.