கொரோனாவுக்கான எந்த தடுப்பு மருந்தும் 2021-க்கு முன் பயன்பாட்டுக்கு வராது – மத்திய அரசு
கொரோனாவுக்கான எந்த தடுப்பு மருந்துகளும் 2021-ம் ஆண்டு முன்பு பயன்பாட்டுவருவதற்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதையும் சிதைத்துக்கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் மருத்துவ வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இதுவரையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான கண்டுபிடித்துள்ள கோவேக்சின் என்றழைக்கப்படும் இந்த மருந்தை சென்னை எஸ்.ஆர். எம் மருத்துவமனை உட்பட நாடு முழுவதும் உள்ள 12 மருத்துவமனைகளில் சோதனை செய்ய ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கியது.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று ஐ.சி.எம்.ஆர் அறிவித்திருந்தது. உடனடியாக தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டுவருவது ஆபத்து என்று மருத்துவ வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.
இந்தநிலையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவேக்சின், இசட்ஒய்கோவ்-டி ஆகிய இரண்டைச் சேர்ந்த 140-ல் 11 தடுப்பு மருந்துகள் மனித சோதனைக்கு வந்துள்ளது. இதில், எந்த தடுப்பு மருந்தும் 2021-ம் ஆண்டுக்கு முன்னதாக பொதுமக்கள் பயன்பாட்டுவராது’ என்று தெரிவித்துள்ளது.