சுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி!!
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர்
தீபனின் குடும்பமோ நிச்சயம் எம்.ஏ.சுமந்திரனிற்கு வாக்களிக்கப்போவதில்லை.மாவீரர்களை , போராளிகளை பயங்கரவாதிகள் என்ற எம்.ஏ.சுமந்திரனை அவர்கள் என்றுமே மன்னிக்கப்போவதுமில்லையென தெரிவித்துள்ளார் விடுதலைப்புலிகள் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரும்,மூத்த போராளியுமான பசீர் காக்கா என்றழைக்கப்படும் மனோகர்.

மாவீரரான பெண் போராளி அறிவிழியின் தந்தையுமான அவர் யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரனிடம் மன்றாட்டமாக கேட்கின்றேன். தயவு செய்து புனிதர்களது கல்லறைகள் இருக்கின்ற மாவீரர் துயிலுமில்லத்திற்கு சுமந்திரன் போன்ற தமிழ் மக்கள் விரோதிகளை அழைத்து சென்று அதன் புனிதத்தை சீரழிக்கவேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே எம்.ஏ.சுமந்திரனிற்கும் அவரது தலைவரான இரா.சுமந்திரனிற்கும் இவ்விடயத்தில் வேறுபாடில்லையென தெரிவித்த மனோகர் ஏனைய தலைவர்களான அமிர்தலிங்கம் போன்றவர்கள் மரணிக்கையில் தேசிய பட்டியிலில் தெரிவாகி கடைசி காலத்தை கழித்தது போல சம்பந்தரும் கழிக்கட்டுமெனவும் தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் தேசியத்துடன் நிற்கின்ற எந்த கட்சியினையாவது ஏற்று வாக்களிக்கட்டும்.ஆனால் நிச்சயமாக அந்த வாக்கில் ஒரு வாக்கேனும் போராட்டத்தையும் மாவீரர்கள்,போராளிகளையும் கொச்சை படுத்திவரும் சுமந்திரனிற்காக இருக்க கூடாதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.