November 22, 2024

சீன கடல் எல்லையில் கடும் பதற்றம்..!!

சீன கடல் எல்லையில் கடும் பதற்றம்..!!

தென் சீன கடல் எல்லையில் சீனாவின் கடற்படை தீவிரமான போர் பயிற்சியை மேற்கொண்டு வருவதால் கடல் எல்லையில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.

லடாக் எல்லையில் இந்தியா சீனா இடையே கடுமையான பிரச்சனை நிலவி வருகிறது. அதிலும் கல்வான், பாங்காங் திசோ, ஹாட்ஸ்பிரிங்ஸ், டெப்சாங் ஆகிய பகுதிகளில் சீனாவின் இராணுவம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியாவுடன் மட்டுமல்லாது வேறும் சில நாடுகளுடனும் எல்லையில் மோதலை கடைபிடித்து வருகிறது சீனா.

இதன்படி சீனா தற்போது தென் சீன கடல் எல்லையில் அண்டை நாடுகளுடன் மோதி வருகிறது. தென் சீன கடல் எல்லையை பகிர்ந்து கொள்ளும் வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகள் மீது சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது.

சீனாவின் இந்த செயல் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வருகிறது. தென் சீனாவின் அருகே இருக்கும் கடல் பகுதியை மலேசியா, வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடுகிறது.

அதிக அளவில் இங்கு இருக்கும் எண்ணெய் வளம் தான் இதற்கு காரணம். ஏற்கனவே இங்கு மலேசியாவும் சீனாவும் எண்ணெய் எடுக்கிறது.

இதனால் மலேசியாவின் எண்ணெய் கிணறுகளை கட்டுப்படுத்த கடல் பகுதியை மொத்தமாக கைப்பற்ற சீனா முயன்று கொண்டு இருக்கிறது.

சீனாவின் செயலுக்கு தடையாக அமெரிக்கா மற்றைய நாடுகளுக்கு உதவி செய்து அமெரிக்கா சீனாவிற்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.