மீண்டும் சர்ச்சையினுள் சிறீதரன்?
ஏற்கனவே வடக்கத்தையான் என இந்திய வம்சாவளி மக்களை விழித்து சிக்கலில் அகப்பட்டுக்கொண்ட சிறீதரன் தற்போது மீண்டும் சாதியத்தை தூண்டி கிளிநொச்சியில் கட்டை பஞ்சாயத்து செய்ய புறப்பட்டு ஆப்பிழுத்த குரங்காகியிருக்கிறார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கிளிநொச்சி பொன்னகர் கிராமத்திற்கு வருகை தந்த கூட்டமைப்பு வேட்பாரள் ஆனோல்ட் அங்கு மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டார். இதன் போது மக்கள் கிளிநொச்சி தமிழரசு கட்சியினராலும், கரைச்சி பிரதேச சபையாலும் தங்கள் பிரதேசம் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர் ஆனோல்ட் அங்குள்ள அமைப்பு ஒன்றுக்கு 60 ஆயிரம் பணத்தை கிராமத்தின் தேவையான குழாய் கிணறு ஒன்றை அமைக்க வழங்கியிருந்தார். இதனை கேள்வியுற்ற சிறீதரன் அக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது தொடர்பில் சாதியம் பேசி கடிந்துள்ளார்.
இதனை குறித்த நபர் அந்த அமைப்பின் ஏனையவர்களுக்கு கூற பிரச்சினை பெரிதாகி குறித்த அமைப்பு விடயத்தை ஆனோல்ட்க்கும் தெரியப்படுத்தி அவர் வழங்கிய 60 அயிரம் ரூபா பணத்தையும் திருப்பி அனுப்பிவிட்டனர்.
சாதி, பிரதேச வாதங்களில் ஊறியிருக்கின்ற இனவாதியாக சிறீதரன் அவதரித்துள்ளமை மக்களை சீற்றமடைய வைத்துள்ளது.