அமெரிக்காவுக்கு அனுமதியில்லை! 15 நாடுகளுக்கு எல்லைகளை திறந்த ஐரோப்பிய ஒன்றியம்!
கொரோன தாக்கத்தினால் பூட்டப்பட்டிருந்த ஐரோப்பிய நாடுகளின் போக்குவரத்து எல்லைகள் சீனா, ஐப்பான் மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 15 நாடுகளுக்கு தனது எல்லைகளை ஜூலை 1 முதல் திறந்துவிட்டுள்ளது ஐரோப்பிய யூனியன்.ஆனால், இந்தப் பட்டியலில், தற்போது உலகின் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உள்ள அமெரிக்கா இடம்பெறவில்லை. ஆனால், சீனா இடம்பெற்றுள்ளதானது ஆச்சர்யத்தைக் ஏற்ப்படுத்தியுள்ளது.
அதேசமயம், இந்தப் பட்டியல் 2 வாரங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் என்றும், இதே சலுகையை, சீனாவும் ஐரோப்பியர்களுக்கு வழங்க வேண்டுமெனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் உருகுவே போன்ற நாடுகளுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. அதேசமயம், இந்த முடிவிற்கு இறுதி அனுமதியும் பெறப்பட வேண்டியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.