Dezember 3, 2024

உலகப் புகழ்பெற்ற இலங்கைத் தமிழனுக்கு வாழ்த்து தெரிவித்தார் கோட்டாபய…!!

21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெறுமதியான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் என உலகின் மிகவும் பிரபல்யமான சஞ்சிகையான விஸ்டன் (Wisden) சஞ்சிகையினால் பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முத்தையா முரளிதரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பெருமை சேர்ப்பதற்காக முத்தையா முரளிதரன் எப்போதும் தன்னை அர்ப்பணித்துள்ளார்.

அவரது இந்த சாதனைக்குத் அவரை நான் மனதார வாழ்த்துகின்றேன் என்றும் கூறியுள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தினூடாக ஜனாதிபதி இந்த வாழ்த்தை தெரிவித்துள்ளார்.