உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் அவசியமில்லை – முத்தையா முரளிதரன்
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பில் மகிந்தானந்த அளுத்கமகே வெளியிட்ட தகவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் அவசியமில்லை என முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தானந்த தெரிவித்த கருத்தில் விளையாட்டு வீரர்கள் எவருக்கும் தொடர்பில்லை என கூறியிருக்கின்றார்.
ஆகவே அது பற்றி கருத்து தெரிவிக்கும் அவசியமில்லை என முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
நுரெலியாவில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
கிரிக்கெட் வீரர்களுக்கு இதில் தொடர்பில்லை என்றே அவர் கூறுகிறார்.
2011 ஆம் ஆண்டு நான் அணியில் விளையாடிய வீரர். வீரர்கள் எவருக்கும் தொடர்பில்லை எனும் போது நான் அது பற்றி கருத்து கூற வேண்டிய அவசியமில்லை.
வீரர்களை தெரிவு செய்வது தொடர்பிலும் எனக்கு சம்பந்தமில்லை. அது தேவையுமில்லை.
நான் அணியின் தலைவரோ, துணை தலைவரோ அல்ல, அணியில் விளையாடிய வீரர்.
தெரிவுக்குழுவும், அணித் தலைவரும், பயிற்சியாளர் ஆகியோரே அணியில் இடம்பெறும் வீரர்கள் பற்றிய தீர்மானங்களை எடுப்பார்கள்.
நான் 20 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியுள்ளேன். நான் எவரையும் விமர்சித்ததில்லை. விமர்சிக்க போவதுமில்லை.
தெரிவுக்குழுவினர் அந்த சந்தர்ப்பத்தில் எடுக்கும் நிலைப்பாடு. அனைவரும் யோசனைகளை முன்வைத்தால், அணியை தெரிவு செய்ய முடியாது.
அன்றைய தெரிவாளரின் தெரிவு அதுவாக இருந்திருக்குமாயின் அதனை ஏனையோர் ஏற்றுக்கொண்டார்கள் என்றால், அந்த அணி விளையாடும்.
நான் இருந்த 20 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட்டில் இதுதான் நடந்தது எனவும் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.