November 21, 2024

தமிழர் தாயகத்தில் மீண்டும் ஊடக அடக்குமுறைகள்!

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் மீண்டும் அதிகரித்து ஊடக நெருக்கடிகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் யாழ்.ஊடக அமையம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இது தொடர்பில் இன்று யாழ்.ஊடக அமையத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்  அண்மைக்காலமாக மீண்டும் அதிகரித்துவரும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான கெடுபிடிகள்; அச்சமானதொரு சூழலை தோற்றுவித்து வருகின்றமை தொடர்பில் யாழ்.ஊடக அமையம் தனது ஆழ்ந்த கவலையினை பதிவு செய்யவிரும்புகின்றது.
கடந்த காலங்களில் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஊடக அடக்குமுறைகள்,படுகொலைகள் மற்றும் காணாமல் ஆக்குதல்கள் தொடர்பில் யாழ்.ஊடக அமையம் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்திருந்தது.நீதி கோரிய அதனது பயணத்தின் போது தென்னிலங்கை ஊடக அமைப்புக்களும் ஆதரவு குரல் கொடுக்க தவறவில்லை.
இந்நிலையில் தற்போது தென்னிலங்கையும் அத்தகைய சூழலை எதிர்கொள்ள தொடங்கியுள்ள நிலையில் யாழ்.ஊடக அமையம் தனது ஆதரவை வெளிப்படுத்தி நிற்கின்றது.
ஆயினும் தெற்கு போலன்றி வடகிழக்கு தமிழர் தாயகத்திலும்; சத்தம் சந்தடியின்றி ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக செயற்பாட்டாளர்கள் மீண்டும் பழிவாங்கும் பாணியில் இலக்கு வைக்கப்படுகின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.
கடந்த இரண்டு மாத காலப்பகுதியினுள் இத்தகைய எட்டிற்கும் அதிகமான சம்பவங்கள் வடக்கில் மட்டும் அரங்கேறியுள்ளது.
குறிப்பாக படுகொலை செய்யப்பட்ட எமது சக ஊடகவியலாளன் ஜயாத்துரை நடேசனை நினைவு கூர்ந்து மிக எளிமையாக ஊடக அமையத்தில் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் அச்சுறுத்தலிற்குள்ளானது.
வெறும் ஏழு ஊடகவியலாளர்கள் மட்டும் பங்கெடுத்த அந்த நினைவேந்தலை தடுக்க முற்றுகையிடப்பட்டதுடன் சுமார் 14 காவல்துறையினர் சீருடையுடனும் சிவிலிலும் குவிக்கப்பட்டனர்.
அத்துமீறி ஊடக அமையத்தினுள் புகுந்த இத்தரப்புக்கள் ஊடகவியலாளர்கள் தொடர்பில் தகவல் திரட்ட முற்பட்டனர். அத்துடன் அச்சுறுத்தலையும் விடுத்தனர்.
இதேவேளை கொல்லப்பட்ட மக்களை நினைந்து முன்னெடுக்கப்பட்ட நினைவேந்;தல்கள் தொடர்பில் தமது ஊடகப்பணியில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் பலரும் யாழ்.காவல்நிலைய பொறுப்பதியால் மிரட்டப்பட்டனர்.வலிந்து ஊடகவியலாளர்கள் புகைப்படமும் பிடிக்கப்பட்டிருந்தனர்.
அதே போன்று மே18 செய்தி சேகரிப்பு பணிக்கென யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைதீவு சென்ற ஊடகவியலாளர்கள் ஆறிற்கும் மேற்பட்ட இராணுவ சோதனை சாவடிகளில் திட்டமிட்டு தடுக்கப்பட்டனர்.இலங்கை அரச தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஊடகவியலாளர் அடையாள அட்டையினை சமர்ப்பித்தும் இழுத்தடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதேவேளை முல்லைதீவில் பணியாற்றிவருகின்ற ஊடகவியலாளர்கள் மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
இராணுவத்தளபதியின் வருகையினை அறிக்கையிட சென்ற ஊடகவியாளர்; பணியாற்ற முடியாது தடுக்கப்பட்;டார்.அச்சுறுத்தலை எதிர்கொண்டார்.ஏற்கனவே வௌ;வேறான பல சந்தரப்பங்களில் தாக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் நெருக்கடிகள் மத்தியில் தனது பணியினை தொடர்கின்றார்.அவரை போன்றே முல்லைதீவில் மேலும் பல ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலை எதிர்கொண்டவாறே தமது பணியினை ஆற்றிவருகின்றர்.
இதே போன்றே வவுனியா,கிளிநொச்சி மற்றும் மன்னாரிலும் சுதந்திரமாக தமது ஊடகப்பணியினை முன்னெடுக்கமுடியாது ஊடகவியலாளர்கள் தடுக்கப்பட்ட சம்பவங்கள் அரங்கேறியுள்ளதுடன் சுதந்திரமான ஊடகப்பணி கேள்விக்குள்ளாகியுள்ளது.
ஏற்கனவே திருகோணமலையில் சமூக ஊடகங்களில் தமது கருத்துக்களை பதிவு செய்த இளைஞர்கள் விசாரணைகளிற்குள்ளாகியுள்ளனர்.
மட்டக்களப்பில் கொலை மிரட்டல்கள் சரளமாக விடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் சக்தி தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் மீது வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நெருக்கடிகள்  மத்தியில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடகவியலாளர்களிற்கான நீதி கோரிய பயணத்தின் மத்தியில் ஊடக சுதந்திரத்தை பேண அரசை யாழ்.ஊடக அமையம் வலியுறுத்த விரும்புகின்றது.
வட கிழக்கிலாயினும் சரி நாட்டின் ஏனைய பகுதிகளிலாயினும் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக பணியாற்றுவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவே நாம் கோரி நிற்கின்றோம்.
அதேவேளை காலத்தின் தேவை கருத்தி தென்னிலங்கை ஊடக அமைப்புக்களுடனும் சர்வதேச ஊடக அமைப்புக்களுடனும்  கைகோர்த்து ஊடக சுதந்திரத்திற்கான பயணத்தில்; இணைந்து செயற்பட யாழ்.ஊடக அமையம் தனது பகிரங்க அழைப்பினையும் இச்சந்தர்ப்பத்தில் விடுக்க விரும்புகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.