November 21, 2024

டொனால்ட் டிரம்ப் மீது வழக்கு தொடுத்த இலங்கைத் தமிழர்!


சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் கொண்டு வந்த தனிப்பட்ட சட்டம் ஒன்றுக்கு எதிராக, அந்நாட்டின் உச்ச நீதிமன்றில் ஈழத் தமிழர் ஒருவர் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.

அமெரிக்க அதிபரின் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியானது. அதில் அமெரிக்காவில் அகதிகள் தஞ்சம் கோரியுள்ளவர்களை, அந்நாட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தாமலே நாடு கடத்த முடியும் என்பது தான் அது.

அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றில் வழக்கு ஒன்றை தொடுத்தார் ஈழத் தமிழரான விஜயகுமார் துரைசிங்கம். கடந்த 2 தினங்களுக்கு முன்னர் 7 பேர் கொண்ட நீதியரசர்கள் இந்த வழக்கை விசாரித்து.

அதிபர் டிரம்ப் கொண்டு வந்த சட்டத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளார்கள். இருப்பினும் அமெரிக்க அதிபரின் சட்டத்தை எதிர்த்து, ஒரு வெளிநாட்டவர் தொடர்ந்த வழக்கு என்ற ரீதியில் அது அமெரிக்காவில் பரவலாக பேசப்பட்ட ஒன்று.

இதன் முடிவுகளை கூட, அமெரிக்க தொலைக்காட்சிகள் விவாதப் பொருகளாக எடுத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.