திருகோணமலை மாவட்டமும் தமிழர் அரசியலும்
திருகோணமலை மாவட்டம் மாவட்டத் தேர்தல் முறமை வருவதற்கு முன்னர் மூன்று உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பியது.பின்னர் அது நான்கு உறுப்பினர்கள் ஆனது.
மூதூரில் திருமிகு ஏகாம்பரம் ,திருமிகு.தங்கத்துரை ஆகியோர்களைத் தவிர தொகுதித் தேர்தல் முறைமையில் எந்த ஒரு தமிழரும் தெரிவாகவில்லை.வட பகுதியில் முல்லைத்தீவு எனும் தொகுதியை பெறுவதற்காக காவு கொள்ளப் படது மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதி.
1989 தேர்தலைத் தவிர மற்ற எல்லாக் காலத் தேர்தலிலும் தமுழரசுக்கட்சி தமிழர் கூட்டணி ,தமிழ் தேசியக் கூட்டமைப்பு.என மாறு ரூபம் கொண்டாலும் ஒரே கட்சி சார்ந்தே பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகினர்.அல்லது 1947முதல் மூதூரில் சுயேட்சையாய் போட்டியிட்ட ஒருவருக்கு ஆதரவளித்தமையும் வரலாறு.மூதூருக்கு திருகோணமலையிலிருந்து ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்றவர்களும் இவர்களே.ஒரு தேர்தலில் ஐக்கியதேசியக் கட்சியில் கேட்ட ஒருவரை அடுத்த தேர்தலில் தங்கள் வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற்றவர்களும் இவர்களே.1977ல் திருகோணமலை மக்களின் பெரும்பான்மையோர் தங்கத்துரை அவர்களை வேட்பாளராக போடும்படி கேட்டும் சம்பந்தர் ஒரு சட்டத்தரணி என்ற காரணம் சொல்லி வேட்பாளராக்கி வெற்றி பெற்றவர்களும் இவர்களே.தங்கத்துரை அண்ணன் பின்னர் சட்டத்தரணியாக தன்னை வளர்த்துக் கொண்டது தனிக் கதை 1994 தேர்தலில் தங்கத்துரை அண்ணன் வெண்றது ஒரு பதிலடியாய் உருவானமையும் அவர் சாதனை. அதுவும் ஒரு சதி வலையில் 1996ல் படுகொலையாய் மாறியமையும் இவர்கள் வரலாறுதான்.
1947ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டைத் தவிர திருகோணமலை மாவட்டத் தமிழர் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் இவர்களே.
திருமிகு.சிவபாலன்
திருமிகு.ஏகாம்பரம்
திருமிகு.இராஜவரோதயம்
திருமிகு.மாணிக்கராஜா
திருமிகு.அ.தங்கத்துரை
திரு.பா.நேமிநாதன்
1965ல் மூதூரில் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முகமதலி அவர்கள் அடுத்த வருசமே ஐக்கியதேசியக் கட்சியில் ஐக்கியமானது வரலாறு.
2001 முதல் அண்மைக் காலம் வரை
திரு.இரா.சம்பந்தன்
திரு.க.துரைரட்டினசிங்கம்
இதில் ஒரு முறை மாவட்ட ரீதியில் வெற்றி பெற்ற திரு.துரைரெட்டினசிங்கம் அவர்கள் பின்னர் தேசியப் பட்டியல் எம்பியாகிறார்.
1989 ல் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த ராஜாவையும் பசீரையும் தவிர இவர்களே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்திருக்கின்றனர்.
ஒட்டு மொத்தமாக திருகோணமலை மாவட்டத்தில் நடத்தப் பட்ட எல்லாக் குடியேற்றங்கள் அத்து மீறல்கள் எல்லாவற்றுக்கும் இவர்களே சாட்சி .
இனியும் சாதிக்க என்ன இருக்கு எல்லாம் முடிந்து தமிழர்கள் மூன்றாவது நிலைக்கு தள்ளப் பட்டும் தொல் நிலங்கள் துண்டாடப் பட்டும் வந்த வரலாறு இவர்கள் காலமே.
இவற்றைத் தடுக்க இவர்கள் நடத்திய போராட்டங்கள் எத்தனை .
இன்னும் இன்னும் பழைய பெருங்காயப் பானையோடு அலையும் இவர்கள் .
தேர்தல் கால அரசியல் மட்டுமே ஒவ்வொரு முறையும் புதிய புதிய வேட்பாளர்கள் போடு காய்களாய் வர அடுத்த முறை அவர்கள் காணாமல் போவார்கள்.
உலகில் எங்கும் காணா இணையிலா அரசியல் இவர்களது.
மீண்டும் மீண்டும் ஏமாறும் மக்கள்.
பால.சுகுமார்
மேனாள் முதன்மையர்
கலை கலாசாரப் புலம்
கிழக்குப் பல்கலைக்கழகம்