März 28, 2025

மேலுமொரு தந்தை மரணம்!

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் சுகயீனம் காரணமாக வவுனியாவில் இன்று உயிரிழந்துள்ளார்.
காணாமலாக்கப்பட்ட தங்களுடைய பிள்ளைகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரி வவுனியாவில் கடந்த 1222 நாட்களை கடந்து தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் குறித்த போராட்டங்களில் கலந்து கொண்டு தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் சுகயீனம் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.