சிங்கள குடியேற்றவாசிகளிற்காக கண்ணீர் விடும் டக்ளஸ்!
வவுனியா, போகஸ்வெவ சிங்கள குடியேற்றத்திற்கு சென்ற முன்னாள் போராளியும் இப்போதைய அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தவிற்கு ஆமோக வரவேற்பளிக்கப்பட்டதாக அவரது கட்சி அறிவித்துள்ளது.
சந்தஸ்ரீ ரஜமஹா விகாரை முன்றலில் இன்று நடைபெற்ற குறித்த வரவேற்பு நிகழ்வில் விகாராதிபதி பலகல்லே சுமனதிஸ்ஸ தேரர் அமைச்சருக்கு ஆசி வழங்கியதோடு அமைச்சரின கடந்த கால செயற்பாடுகளும் மக்கள் நலன்சார் வேலைத் திட்டங்களும் அனைவருக்கும் முன்மாதிரியாக இருப்பதாகவும் தெரிவித்தாராம்.
இந்நிலையில், பிரதேச மக்களினால் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டது.
அந்தவகையில், போக்குவரத்துப் பிரச்சினைகள், மருத்துவமனை, வேலை வாய்ப்பு, குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத் தருமாறும் கோரிக்கையினை சிங்கள மக்கள் முன்வைத்தனர்.
குறித்த கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்த அமைச்சர்;, சிறிய மருத்துவ நிலையம் ஒன்றை உடனடியாக அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதுடன் பல நோக்கு கூட்டுறவுச் சங்க கிளை ஒன்றினை அமைப்பதறகும் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
அத்துடன் மின்சாரம், குடிநீர் பிரச்சினை போன்றவற்றுக்கான தீர்வு தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுன் தொடர்பு கொண்டு உரையாடிய அமைச்சர் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய அறிவுறுத்தல்களையும் வழங்கினாராம்.
இதேவேளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஏற்றுவோம் என்று வீராப்பு பேசி வாக்குகளை சூறையாடியவர்கள் இப்போது புதிய அரசியல் யாப்பிற்காக ஜனாதிபதியுடன் கை கோர்க்க தயாராக இருப்பதாக இப்போது புதுக் கதை கூற ஆரம்பித்துள்ளார்கள் என டக்ளஸ் தேவானந்தா பரிகாசம் செய்துள்ளார்.