November 22, 2024

பலாலியில் அவசர கூட்டம்?

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் படையினர் மற்றும் பொலிஸாரை இலக்குவைத்து நடாத்தப்பட்டதாக கூறப்படும் நாட்டு வெடிகுண்டு தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக யாழ்.பலாலி இராணுவ தலைமையகத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது.
வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையிலுள்ள முச்சந்தியில் பொலிஸாரை இலக்கு வைத்து கடந்த மாதம் இடம்பெற்ற  தாக்குதல், வல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக வெடிபொருள் நிரப்பட்ட பொம்மை ஒன்றை வீசிச் சென்றமை, கிளி.கண்டாவளையில் மர்ம வெடிபொருள் மீட்கப்பட்ட சம்பவங்கள் கடந்த 3 வாரங்களில் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே  யாழ்.வல்லை படைமுகாமில் பொம்மை ஒன்றுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிபொருளை வீசி சென்றதாக கைது செய்யப்பட்டவர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் வல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக பொம்மை ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் மீட்கப்பட்டது.
அந்தப் பொம்மையை ஆராய்ந்த போது வெடித்ததில் படைச் சிப்பாய்கள் இருவர் காயமடைந்தனர். அவர்கள் பலாலி படைத்தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.
வல்லை இராணுவ முகாமை அண்டிய பகுதியில் வெடிப்புச் சத்தம் கேட்டதாக நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு சென்று பொலிஸார்
விசாரணைகளை முன்னெடுத்த வேளைஇ முகாமினுள் தவறுதலான வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக இராணுவத்தினர் தெரிவித்து பொலிஸாரின் மேலதிக விசாரணைக்கு இராணுவத்தினர் ஒத்துழைக்கவில்லை.
என பொலிஸ் தரப்பு தெரிவித்தது. இந்த நிலையில் வல்லை வீதி ஊடான போக்குவரத்தில் ஈடுபட்டோரின் விவரங்களை சீசீரிவி கமரா பதிவுகளை வைத்து ஆராய்ந்த இராணுவத்தினர்இ
இன்று காலை நீர்வேலி பூதர்மடத்தடியில் சுற்றிவளைப்புத் தேடுதலை மேற்கொண்டு 25 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர். அவரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினர் முற்படுத்தினர்.
இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் தரப்புகளால் எந்தவொரு விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் சந்தேக நபரை இன்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் கோப்பாய் பொலிஸார் ஒப்படைத்தனர்.வை தொடர்பில் ஆராய்ந்து பின்னணியில் இயங்குபவர்கள் தொடர்பில் உயர்மட்ட விசாரணையை நடத்துவதற்கு முப்படைகளின் தளபதிகள், கட்டளைத் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், சிறப்பு அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்கும்  உயர்மட்ட மாநாடு பலாலி படைத் தலைமையகத்தில் நாளை இடம்பெறவுள்ளது. இதேவேளை, இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சிறப்பு அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரியாக கடந்த வாரம் பதவியேற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.
இதனிடையே  யாழ்.வல்லை படைமுகாமில் பொம்மை ஒன்றுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிபொருளை வீசி சென்றதாக கைது செய்யப்பட்டவர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் வல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக பொம்மை ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் மீட்கப்பட்டது.
அந்தப் பொம்மையை ஆராய்ந்த போது வெடித்ததில் படைச் சிப்பாய்கள் இருவர் காயமடைந்தனர். அவர்கள் பலாலி படைத்தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.
வல்லை இராணுவ முகாமை அண்டிய பகுதியில் வெடிப்புச் சத்தம் கேட்டதாக நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு சென்று பொலிஸார்
விசாரணைகளை முன்னெடுத்த வேளைஇ முகாமினுள் தவறுதலான வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக இராணுவத்தினர் தெரிவித்து பொலிஸாரின் மேலதிக விசாரணைக்கு இராணுவத்தினர் ஒத்துழைக்கவில்லை.
என பொலிஸ் தரப்பு தெரிவித்தது. இந்த நிலையில் வல்லை வீதி ஊடான போக்குவரத்தில் ஈடுபட்டோரின் விவரங்களை சீசீரிவி கமரா பதிவுகளை வைத்து ஆராய்ந்த இராணுவத்தினர்இ
இன்று காலை நீர்வேலி பூதர்மடத்தடியில் சுற்றிவளைப்புத் தேடுதலை மேற்கொண்டு 25 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர். அவரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினர் முற்படுத்தினர்.
இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் தரப்புகளால் எந்தவொரு விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் சந்தேக நபரை இன்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் கோப்பாய் பொலிஸார் ஒப்படைத்தனர்.