März 28, 2025

ஆசிரியர் இரா.அருட்செல்வம்.

ஆசிரியர் இரா.அருட்செல்வம்.
அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை யாழ்ப்பாணத்தில் எங்கு இருந்தாலும் மாணவர்களுக்கு இந்தப் பெயர் தெரிந்திருக்கும்..
„அருட்செல்வம் மாஸ்டர்“
நான் இணுவிலில் பிறக்கவில்லை… அருட்செல்வம் அவர்களை கண்ணால் கண்டதும் இல்லை.. ஆனால் அவரை மனசுக்குள்ளே தரிசித்திருக்கிறேன்.. கனடாவில் நான் சந்தித்த பல இணுவில் நண்பர்கள் இவரைப்பற்றிய பல அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்கள்.. தம்முடைய ஒரு குடும்ப உறுப்பினர்போல், சகலரின் நலன்களிலும் அக்கறை உள்ள ஒருவர் போல பலரும் இவரைப் போற்றிப் புகழ்கின்றனர்.. அவர் கற்பிக்கினற பாங்கு, மாணவர்களில் உள்ள அக்கறை, கல்வியில் அவர் வைத்திருக்கும் மரியாதை போன்ற அவரின் அவரின் நல்பியல்புகளைப் பற்றிச் சொல்லாதவர் எவரும் இல்லை…. எத்தனை ஆண்டுகள் சென்றாலும் அவரின் மாணவர்களின் மதிப்புக்கு உரியவராக அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இணுவில் மண்ணுக்கும் ஆசிரியப் பணிக்கும், கல்விக்கும் இரா.அருட்செல்வம் அவர்களால் பெருமை.