März 28, 2025

தளபதி விஜய்யை இயக்க மறுத்த பிரம்மாண்ட இயக்குனர்..அவர்?

தமிழ் திரையுலகின் பாக்ஸ் ஆபிசில் வசூல் மன்னன் என பேர் எடுத்துள்ளவர் தளபதி விஜய். ஆம் கடந்த 4 படங்களுமே பல வசூல் சாதனையை நம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிசில் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியளவில் பிரம்மாண்ட இயக்குனர் என ரசிகர்களால் கருதப்படுபவர் இயக்குனர் ராஜமௌலி. ஆம் மாவீரன், பாகுபலி உள்ளிட்ட படங்கள் இவரை பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்க செய்தது.

இவரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று பல முன்னணி நடிகர்கள் ஏங்கியுள்ளனர். ஏன், நம் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே வெளிப்படையாக ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் விஜய்யை வைத்து இயக்க ராஜமௌலிக்கு ஒரு வாய்ப்பு தேடி வந்ததாம். ஆனால் அப்போது ராஜமௌலியிடம் பல படங்கள் கைவசம் இருந்ததால், விஜய் வைத்து இயக்க முடியாமல் போனதாம்.

ஆனால் இது மட்டும் கண்டிப்பாக இப்போது நடந்தால் அப்படம் உலகளவில் மிக பெரிய வசூல் சாதனையை படைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.