März 31, 2025

அனலைதீவில் கடற்படை மீது தாக்குதல்!

யாழ். அனலைதீவில் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்திய பொதுமக்களை தேடி தீவு முழுவதையும் கடற்படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.

.கடற்படையினரால் தாக்கப்பட்ட பொதுமக்கள் சிலர் பதிலுக்கு கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடற்படை அதிகாரி மீது கற்கள், போத்தல்களால் அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் கடற்படை அதிகாரியும், சிப்பாயும் காயமடைந்துள்ளனர். இதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் தலைமறைவாகியுள்ளனர். குறித்த நபர்களைத் தேடி தற்போது கடற்படையினர் தீவை முற்றுகையிட்டுள்ளனர்.
அத்துடன், தீவுக்குள் நுழையவும், தீவிலிருந்து வெளியேறவும் தடை விதித்திருக்கும் கடற்படையினர், தீவு முழுவதும் சல்லடைபோட்டுத் தேடுதல் நடத்தி வருகின்றனர்.