April 2, 2025

வவுனியாவில் விபத்து! ஓட்டுநர் படுகாயம்!

vavuniya accident

வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை(09) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியாவில் இருந்து யாழ். சாவகச்சேரி நோக்கி பயணித்த மகிழுந்து இன்று அதிகாலை 01 மணியளவில் வவுனியா, தேக்கவத்தை பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மகிழுந்தானது வீதி கரையில் இருந்த தொலைபேசி கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியதாக தெரியவருகிறது.
விபத்தில் மகிழுந்தை ஓட்டிய நபரே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்திற்கு இலக்கான மகிழுந்து கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.